தனது முதுமை பருவத்தில் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் கிடைத்தை போற்றுபவர்களாகவும், மற்றவர்களுக்கு பேரன்பை பொழிபவர்களாகவும் இருக்க வேண்டும். மாற்றாக தன்னால் நிறைவேற்றமுடியாத  ஆசைகளை மற்றவர்கள் மூலம் நிறைவேற்றுபவர்களாகவும், அதற்காக நெருங்கிய உறவுகளை கட்டாயப்படுத்துபவர்களாகவும்  இருக்க கூடாது. மேலும் பேராசை பிடித்து, புகழுக்கு ஏங்கி தன் சுயத்தை நிலை நாட்ட பெற்ற உறவுகளை பயன்படுத்தக்கூடாது. காலத்துக்கேற்ற மாற்றங்களை உணர்ந்து குழந்தைகளிடம் அன்பும், அரவணைப்பும் மற்றும் அறிவுரையும் செலுத்தபவர்களாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையின் முடிவில் இருப்பதை உனர்ந்து வளர்ந்தவர்களையும், வளர்ந்துகொண்டிருப்பவர்களையும் ஆசிர்வதித்து வழிவிடுபவர்களாக இருக்க வேண்டும்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைபட்டதுதானே வாழ்க்கை! வாழ்வின் முடிவில் இருக்கும் முதியவர்கள் ஒரு எதிர்ப்பார்ப்பற்ற குழந்தைகளாக இருக்க வேண்டும். மாறாக தினமும் திட்டம் தீட்டி இளையவர்களின் மீது தன் அனுபவங்களையும், ஆசைகளையும் திணிப்பவர்களாகவும் இருக்ககூடாது. இது சதாரண முதியவர்களுக்கு,  அசாதரணமானவர்களுக்கல்ல!