எத்தனை உண்மையான / சத்தியமான  வரிகள். இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அறிந்தது கை  மண்ணளவு மட்டும் தான். இந்த சத்தியம் கடவுளின் அவதாரங்களாக பிறக்கும் மாமனிதர்களுக்கும் பொருந்தும். இதை கொஞ்சம் கூர்ந்து ஆராய்ந்தால், ஒரு உண்மை புரியும்.

இன்று பெரும்பாலான மாமனிதர்கள் எல்லாம், கை மண்ணளவு அறிந்துகொண்டு, எல்லாம் அறிந்தவர்கள் போல சுய சத்தியத்தை வெளியிட்டு, தன்னையே தலைவனாக்கி, தன்னைச்சுற்றி கூட்டம் சேர்த்து ஒரு அமைப்பை எற்படுத்திகொள்கிறார்கள். இவர்களில் பலர் மதவாதிகள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள் என்ற போர்வைக்குள் மறைந்துகொண்டு வருகிறார்கள்.

இந்த முரண்பட்ட, தன்னறிவுயில்லாத, குறையுள்ள தலைவர்களே இந்த உலகின் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறார்கள்!