அகத்திலும் புறத்திலும்…

உன்னைத் தேடினால்

கடவுளைக் கண்டடைவாய்!

கடவுளைத் தேடினால்

உன்னைக் கண்டடைவாய்!

உன் தேடல் பொய்யானால்

மாயவலையில் கட்டுண்டு

கலவரத்துக்கு உட்படுவாய்!

உன் தேடல் மெய்யானால்

உன் நம்பிக்கையின் மேல்

தளராத நம்பிக்கை கொண்டு

அக மகிழ்ச்சியுடன்

வாழ்வாங்கு வாழ்வாய்!

Aganagai